spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅதையெல்லாம் நான் தவிர்க்க நினைக்கிறேன்.... 'ஜெயிலர் 2' குறித்து நெல்சன்!

அதையெல்லாம் நான் தவிர்க்க நினைக்கிறேன்…. ‘ஜெயிலர் 2’ குறித்து நெல்சன்!

-

- Advertisement -

இயக்குனர் நெல்சன், ஜெயிலர் 2 படம் குறித்து பேசி உள்ளார்.அதையெல்லாம் நான் தவிர்க்க நினைக்கிறேன்.... 'ஜெயிலர் 2' குறித்து நெல்சன்!

தமிழ் சினிமாவில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். அதைத்தொடர்ந்து இவர், இயக்கிய ‘டாக்டர்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்தது இவருக்கு விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைக்க ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மாறாக பலரும் நெல்சனை விமர்சித்து வந்தனர். இருந்த போதிலும் விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்து ரஜினிக்காக தரமான கதையை தயார் செய்து ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார் நெல்சன். இந்த படம் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. எனவே நெல்சன் தற்போது இயக்கி வரும் ஜெயிலர் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.அதையெல்லாம் நான் தவிர்க்க நினைக்கிறேன்.... 'ஜெயிலர் 2' குறித்து நெல்சன்! சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், அனிருத்தின் இசையிலும் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் எனவும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் நெல்சன், ‘ஜெயிலர் 2’ படம் குறித்து பேசி உள்ளார். அதையெல்லாம் நான் தவிர்க்க நினைக்கிறேன்.... 'ஜெயிலர் 2' குறித்து நெல்சன்!அதன்படி அவர், “படம் உண்மையில் எப்படி வந்திருக்கிறது என்பதை காண படம் வெளியாகும் வரை காத்திருப்போம். அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவதை நான் தவிர்க்க நினைக்கிறேன். எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு படம் அமையவில்லை என்றால் மக்கள் அதை வேஸ்ட் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார்கள். எனவே எதிர்பார்ப்புகளை எதார்த்தமாக வைத்திருப்பது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ