Homeசெய்திகள்சினிமாவீட்ல கற்பூரம் கொளுத்தலன்னா நம்ம எல்லாம் தீவிரவாதிங்கதான் - பா.ரஞ்சித் பேச்சு வீட்ல கற்பூரம் கொளுத்தலன்னா நம்ம எல்லாம் தீவிரவாதிங்கதான் – பா.ரஞ்சித் பேச்சு
- Advertisement -
ப்ளூ ஸ்டார் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காதல், கலக்கல் காமெடி, அதிரடி சண்டை, கல்லாகட்டும் கமர்ஷியல் என வழக்கமாக பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை மாற்றுப்பாதையில் அழைத்துச் சென்ற பெருமை ஒரு சிலரை மட்டுமே சாரும். அதில் முக்கியமான நபர் பா.ரஞ்சித். அடித்தட்டு மக்களின் மனதை திரையில் வெளிச்சம் போட்டு காட்டியவர் பா. ரஞ்சித். அட்டக்கத்தி படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமாகினார். முதல் படத்திலேயே கோலிவுட் திரையுலகில் முத்திரை பதித்தார். தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கி வடசென்னை வாழ்வை ரசிகர்களுக்கு காட்டினார்.

அடுத்தடுத்து ரஜினியை வைத்து காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதைத் தொடர்ந்து பெரும் நட்சத்திர பட்டாளத்தை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கினார். இவர் தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாதம் வௌியாகும் என தெரிவிக்கப்பட்டது. இயக்குநராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ப்ளூ ஸ்டார். இதில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பா ரஞ்சித், இன்று முக்கியமான நாள். இன்றைய நாளில் வீட்டில் கற்பூரம் ஏற்றவில்லை என்றால், அனைவரையும் தீவிரவாதிகள் என்று கூறிவிடுவார்கள். அந்த அளவு இன்று பயங்கரமாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 5,10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான ஒரு இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்ற பயம் இருந்துகொண்டே இருக்கிறது என தெரிவித்தார்.