Homeசெய்திகள்சினிமாநாடு முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் - பா.ரஞ்சித்

நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் – பா.ரஞ்சித்

-

தமிழ்நாடு மட்டுமன்றி நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. பொதுமக்கள், அரசியல் வாதிகள், திரை பிரபலங்கள் என அனைவருமே ஆர்வமாக வாக்களித்தனர். அந்த வகையில் சென்னை மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட தனது சொந்த ஊரான கரலப்பாக்கம் அரசு உயர்நிலைபள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் வாக்களித்தார். நீண்ட வரிசையில் மக்களுடன் சேர்ந்து காத்திருந்த அவர், தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்,அதற்காகத்தான் வாக்கு செலுத்தி உள்ளேன்.இது மிக முக்கியமான தேர்தல்,இந்திய இறையாண்மைக்கு சவால் விட கூடிய தேர்தலாக பார்க்கிறேன்.மதவாத சக்திகளுக்கு எதிராக,ஜனநாயகத்தை விரும்பக்கூடிய ஒவ்வொருவருக்கும் அவசியமான தேர்தல்,இதில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

பா. ரஞ்சித் தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

MUST READ