Homeசெய்திகள்சினிமாபிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் ஆவணப்படம்..... எப்போது ரிலீஸ்!

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் ஆவணப்படம்….. எப்போது ரிலீஸ்!

-

- Advertisement -

பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ராஜமௌலியின் ஆவணப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் ஆவணப்படம்..... எப்போது ரிலீஸ்!தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜமௌலி. இவர் மகதீரா, நான் ஈ போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பின்னர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய படங்கள் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. அதேசமயம் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரையும் பெற்றுத் தந்தது. இவர் கடைசியாக ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரின் நடிப்பில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். பாகுபலி படத்தை போல் இந்த படமும் ஆயிரம் கோடிக்கு அதிகமாக வசூல் செய்து ராஜமௌலிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அடுத்ததாக இவர் மகேஷ் பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது.பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் ஆவணப்படம்..... எப்போது ரிலீஸ்! இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் மாடர்ன் மாஸ்டர்ஸ் எனும் ஆவணப்படம் திரைத்துறையில் ராஜமௌலியின் அர்ப்பணிப்பை எடுத்துரைக்கும் விதமாக வருகின்ற ஆகஸ்ட் 2-ம் தேதி ராஜமௌலியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ