அமரன் படம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேசியுள்ளார்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ரங்கூன் எனும் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ள படம் தான் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ராகுல் போஸ் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க சாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படமானது வருகின்ற அக்டோபர் 31ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, அமரன் படம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது அவர், “அமரன் திரைப்படம் போர் சம்பந்தமான படம் இல்லை. ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை பயணம் தான் இந்த படம். அவரது குடும்பம் அவரின் அந்த ராணுவ வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறது. ராணுவத்தின் ரோல் மற்றும் காஷ்மீரின் சூழ்நிலை ஆகியவற்றை இந்த கதை பேசி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.