இயக்குனர் ராமின் பறந்து போ படத்திலிருந்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ராம். இவர் தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாக வந்துள்ளார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்கள் இன்று வரையிலும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காமல் இருக்கிறது. அடுத்தது இவரது இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையில் இவர், மிர்ச்சி சிவா நடிப்பில் பறந்து போ எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவா உடன் இணைந்து கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, விஜய் இயேசுதாஸ், அஜூ வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஹில்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார்.
Director Ram’s #ParanthuPo – Teaser release on June 4th..⭐ pic.twitter.com/sodEcdvj2Q
— Laxmi Kanth (@iammoviebuff007) June 2, 2025

இயக்குனர் ராமின் மற்ற படங்களை போல் இந்த படமும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் போல் தெரிகிறது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றது. எனவே வருகின்ற ஜூலை 4 ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வரும் இந்த படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 4ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.