Homeசெய்திகள்சினிமாநடிகைகள் ஆடை குறித்து பிரபல இயக்குநர் சர்ச்சை பேச்சு

நடிகைகள் ஆடை குறித்து பிரபல இயக்குநர் சர்ச்சை பேச்சு

-

பிரபல இயக்குநர் ஆர்.பி. உதயகுமார் நடிகைகளின் ஆடை குறித்து பேசியிருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சின்ன கவுண்டர் படத்தை இயக்கியவர் ஆர்.பி.உதயகுமார். கிழக்கு வாசல், எஜமான், பொன்னுசாமி, ராஜகுமாரன், நந்தவரன் நேரு, கற்க கசடற உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்குநராக மட்டுமன்றி, பாடல் ஆசிரியராகவும் சினிமாவில் பணியாற்றி இருக்கிறார். இதனிடையே சென்னையில் என் சுவாசமே படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.

இதில் தயாரிப்பாளர்கள் கே.ராஜன், இயக்குநர் பேரரசு உள்பட பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பேசிய ஆர்.பி. உதயகுமார், படத்தில் இருந்த பெரும்பாலான நபர்கள், மலையாள மொழியை சேர்ந்தவர்கள் என்பதால், அதுதொடர்பாக பேசினார். நான் இதுவரை படத்தை பார்க்கவில்லை, இனிதான் பார்க்க வேண்டும். படத்தில் பெண்களை ஆடை வழியாக கவர்ச்சியாக காட்டுவது அதிகமாக இருக்கிறது. பெண்ணியத்தை நேசிக்கிறவர்கள் அதனை சற்று குறையுங்கள் என தெரிவித்தார்.

 

செல்போனை எடுத்தால் ஆப் செய்ய மனசு வர மாட்டிங்குது. பெண்களே உங்கள் உடலை ஏன் இப்படி ஆபாசமாக காட்டுகிறீர்கள் என கேட்க வேண்டும். அதே சமயம், படத்திற்காக வியாபாரத்திற்கும், ரசிகர்களை கவரவும் நடிகைகள் செய்ய வேண்டிய சூழல் உள்ளது என்றார். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ