இயக்குனர் சங்கர், மதராஸி படத்தை பாராட்டியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் 23 வது படமாக நேற்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியான படம் தான் மதராஸி. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கும் நிலையில் அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். விறுவிறுப்பான திரைக்கதையில் காதல் கலந்த ஆக்சன் படமாக வெளியான இந்த படம் சில ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. சில ரசிகர்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதே சமயம் இந்த படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.11 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘மதராஸி’ படம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மதராஸி படம் பல சுவாரசியமான காட்சிகளைக் கொண்ட ஒரு ஈர்க்கக்கூடிய அட்டகாசமான கமர்சியல் படம். ஏ.ஆர். முருகதாஸ் எமோஷனையும், காதலையும், கிரைம்களையும் அழகாக கனெக்ட் செய்திருந்தார். சிவகார்த்திகேயன் கேரக்டர் வித்தியாசமாக இருந்தது. அவர் தன்னுடைய நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார். ஒரு அதிரடி ஹீரோவாகவும் அசத்தியிருந்தார். அனிருத்தின் பின்னணி இசை சூப்பர். வித்யூத் ஜம்வால் வாவ்… ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.