Homeசெய்திகள்சினிமாபாடல் காட்சிகளுக்கு 90 கோடியா?.... சங்கர், ராம்சரண் கூட்டணியின் 'கேம் சேஞ்சர்' ....முக்கிய அப்டேட்!

பாடல் காட்சிகளுக்கு 90 கோடியா?…. சங்கர், ராம்சரண் கூட்டணியின் ‘கேம் சேஞ்சர்’ ….முக்கிய அப்டேட்!

-

- Advertisement -

பிரபல இயக்குனர் சங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேசமயம் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பாளர்கள் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார். இதில் ராம் சரளுடன் இணைந்து கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வாரிசு படத்தில் இசையமைத்த தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கேம் சேஞ்சர் படம் அடுத்த ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ஷங்கர் இந்த படத்தின் பாடல் ஒன்றுக்காக 90 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. சங்கர் அவர் படங்களில் உள்ள பாடல் காட்சிகளை எப்போதும் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்குவார். அதைப்போல ராம் சரணின் கேம்ஸ் படத்திலும் பாடல் ஒன்றை யாரும் எதிர்பாராத விதமாக மிகப்பிரமாண்டமாக உருவாக்கியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ