Homeசெய்திகள்சினிமாசூர்யாவின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.... 'கங்குவா' படத்தை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்!

சூர்யாவின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது…. ‘கங்குவா’ படத்தை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்!

-

- Advertisement -
kadalkanni

சூர்யாவின் 42வது படமாக உருவாகியிருந்த திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்த நிலையில் இப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. சூர்யாவின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.... 'கங்குவா' படத்தை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்!தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 3D தொழில்நுட்பத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரையிடப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் ஒருத்தரப்பில் படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுசீந்திரன், கங்குவா படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோவை கங்குவா படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “கங்குவா படத்தை குழந்தைகளுடன் சென்று பார்த்தேன். தெலுங்கில் எப்படி பாகுபலி படம் பிரம்மாண்ட திரைப்படமோ, அதேபோல் தமிழில் கங்குவா திரைப்படம். ஏன் எல்லாரும் இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை தருகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த படத்தை குடும்பத்துடன் சென்று பாருங்கள். நிச்சயம் என்ஜாய் செய்வீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சுசீந்திரன் அறிக்கை ஒன்றிணையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ் சினிமாவில் மிகவும் நேர்த்தியான பிரம்மாண்டமான திரைப்படம் கங்குவா. ரசிக்கும்படியான திரைக்கதையை அமைத்த இயக்குனர் சிவாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். சூர்யா சாரின் நடிப்பும், உழைப்பும் பிரமிக்க வைக்கிறது. கேமரா, சிஜி என அனைத்தும் உலக தரத்தில் உள்ளது. தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள். காலம் தாழ்த்திக் கொண்டாடி விடாதீர்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்த படத்தை பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ