இயக்குனர் வெற்றிமாறன் வணங்கான் படத்தை பாராட்டியுள்ளார்.
அருண் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வணங்கான் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், மிஸ்கின், சமுத்திரக்கனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்திருந்தார். சேது, பிதாமகன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்த பாலா இந்த படத்தை இயக்கி இருந்தார். ஜிவி பிரகாஷ் மற்றும் சாம் சி எஸ் ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் அருண் விஜயும் காது கேளாத, வாய் பேச முடியாதவராக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். பாலாவின் மற்ற படங்களைப் போல் இந்த படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் பாராட்டியுள்ளார்.
Director #Vetrimaaran about #Vanangaan ..⭐ Film running in theatres now..✌️pic.twitter.com/QLempBzwHc
— Laxmi Kanth (@iammoviebuff007) January 15, 2025
இது தொடர்பான வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, “பாலாவின் படங்களை பார்க்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கு ஏற்ற படம் இது. ஒரு இயக்குனராக ஒரு எழுத்தாளராக அவருடைய படைப்பு அருமையாக இருக்கிறது. இயக்குனர் பாலா இந்த படத்தில் ஒவ்வொரு நடிகர்களையும் அவர் நடிக்க வைத்திருக்கும் விதமும், இந்த படத்தின் இசை போன்ற அனைத்தும் அவர் சொல்ல நினைக்கிற கதையை மிகச் சிறப்பாக சொல்வதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. இந்த படத்தில் இவங்க, அவங்க தான் என்றில்லாமல் அனைவருமே நன்றாக நடித்து இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.