நடிகர் நாகார்ஜுனாவின் ஒரு நாள் டயட் செலவு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நாகார்ஜுனா. இவர் தமிழிலும் ரட்சகன், பயணம், தோழா என பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர். தற்போது இவர் தனுஷின் குபேரா திரைப்படத்திலும், ரஜினியின் கூலி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களிலுமே இவருடைய கதாபாத்திரம் ஸ்ட்ராங்கான கதாபாத்திரமாக அமைந்து இருக்கிறது. எனவே குபேரா, கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு நாகார்ஜுனாவும் ஒரு காரணம். இவ்வாறு நடிகர் நாகார்ஜுனா தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்த வருகிறார். அதேசமயம் 65 வயதிலும் இளமையான தோற்றத்துடன் வலம் வரும் நாகார்ஜுனாவை பார்க்கும்போது அவருடைய உடல் ஆரோக்கியம், இளமை தோட்டத்தின் சீக்ரெட் என்னவாக இருக்கும்? என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது.
அதன்படி நடிகர் நாகார்ஜுனா டயட் உணவுகளின் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறாராம். இதற்காக தினமும் சாப்பாட்டுக்கு மட்டுமே ரூ. 10000 வரை செலவு செய்கிறாராம் நாகார்ஜுனா. இவருடைய ஒரு நாள் சாப்பாடு செலவுதான் பலரின் மாத வருமானமாக இருக்கிறது. எனவே இந்த தகவல் அறிந்த பலரும் ஒருநாள் சாப்பாட்டு செலவு மட்டும் இவ்வளவா? என்ற வாயை பிளந்து வருகிறார்கள்.