வருகிறது சூது கவ்வும் இரண்டாம் பாகம். இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் மிர்ச்சி சிவா!
2013-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சி.வி.குமார் தயாரிப்பில் வெளியான இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாவது குறித்து தற்போது படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி சூது கவ்வும்-2 படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா நடிக்க உள்ளார். முதல் பாகத்தை தயாரித்த சி.வி.குமார் 2-ம் பாகத்தையும் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் 2-ம் பாகத்தை நலன் குமாரசாமிக்கு பதிலாக, “யங் மங் சங்” பட இயக்குநர் எம்.எஸ்.அர்ஜூன் இயக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் ஏப்ரல் 17 ஆம் தேதி சூது கவ்வும்&சு படப்பிடிப்பு துவங்க வாய்ப்பு உள்ளதென தெரிய வருகிறது.