நடிகர் கார்த்தி, பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கார்த்தியின் 25வது படமாக வெளியானது ஜப்பான். இப்படம் கார்த்திக்கு எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தி, நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி 26 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதேசமயம் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் கார்த்தி. தற்காலிகமாக கார்த்தி 27 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிகர் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகர் ராஜ்கிரண் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மெய் அழகன் என்பது தான் கார்த்தி 27 படத்தின் டைட்டில் என்று செய்திகள் வெளியானது. தற்போது கிடைத்த தகவலின்படி மெய் அழகன் என்பதை சிறு திருத்தத்துடன் மெய்யழகன் என்று தான் சொல்ல வேண்டுமாம்.
இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி தீரன் அதிகாரம் 2, சர்தார் 2, கைதி 2 போன்ற
படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.