“இந்தியல பேசாதீங்க தமிழ்ல பேசுங்க” என்று ஏஆர் ரகுமான் தன் மனையிடம் சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான். தற்போது அவர் பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். அப்போது அவரது மனைவியை மேடைக்கு பேச வரும்படி அழைத்தனர். மேடைக்கு வந்த அவர் இந்தியில் பேசினார். அப்போது அவரை இடைமறித்த ரஹ்மான் ”இந்தியல பேசாதீங்க தமிழ்ல பேசுங்க’ கூறியதும் கூட்டத்தில் பலத்த கோஷம் எழுந்தது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. ஏஆர் ரகுமான் எப்போதும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். இந்தியில் கேள்வி கேட்டால் கூட தமிழில் தான் பதில் சொல்லுவார். இதற்கு முன்னர் ஒரு விருது விழாவில் கூட தொகுப்பாளர் இந்தியில் பேசிய போது தமிழில் பேசச்சொன்னது குறிப்பிடத்தக்கது.