spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅடுத்த ஆண்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்...... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ்டர் பிளான்!

அடுத்த ஆண்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்…… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ்டர் பிளான்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் அன்று முதல் இன்று வரை கொண்டாடப்படுபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். அடுத்த ஆண்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்...... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ்டர் பிளான்!இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினி திரைப்படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு வித உற்சாகம் தான். ஆக்சன் காட்சிகளானாலும் சரி, சென்டிமென்ட் காட்சிகளானாலும் சரி, காமெடி காட்சிகளானாலும் சரி எதுவாக இருந்தாலும் அத்தனையிலும் ரசிகர்களை கவர்ந்து விடுவார் ரஜினி. அதாவது ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக விசில் அடித்த ரஜினிக்கு பிற்காலத்தில் கோடான கோடி மக்கள் அவருக்காக விசில் அடிப்பார்கள் என்பதை யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இத்தகைய பெருமைகளை உடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்த ஆண்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்...... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ்டர் பிளான்!இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அடித்து தூள் கிளப்பியது. ரஜினிக்கு ஏற்றார் போல் இசையும் செம மாஸாக அமைந்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. அதைத்தொடர்ந்து ரஜினி வேட்டையன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைப்படம் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில்தான் ரஜினி, அடுத்த ஆண்டு இரண்டு படங்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளாராம். அதில் ஒன்று கூலி, மற்றொன்று ஜெயிலர் 2.அடுத்த ஆண்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்...... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ்டர் பிளான்!

ஜெயிலர் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. எனவே கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஜெயிலர் 2 திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதை தொடர்ந்து படப்பிடிப்புகளும் மிக தீவிரமாக நடத்தி முடிக்க ரஜினி முடிவு செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த தகவல் அறிந்த ரசிகர்கள், 2025 ஆம் ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு போதும் போதும் என்கிற அளவிற்கு ட்ரீட் கிடைக்கப்போகிறது ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ