Homeசெய்திகள்சினிமாதனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருக்கும் அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருக்கும் அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!

-

வருகின்ற ஜூலை 28ஆம் தேதி தனுஷ் பிறந்தநாள் அன்று முக்கிய அப்டேட்டுகள் வெளியாக இருக்கின்றன.

தனுஷ், அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் பீரியாடிக் படமாக மூன்று பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார், ஜான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து விஷ்ணு விஷால், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். மேலும் இவர்களுடன் தனுஷின் அண்ணன் செல்வராகவன் இணைந்துள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இப்படத்திற்காக தனுஷ் மொட்டை அடித்து தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். தற்போது சென்னையில் மிகப் பிரம்மாண்டமான செட் அமைத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி தனுஷ் பிறந்த நாளில் கேப்டன் மில்லர் மற்றும் D50 ஆகிய இரண்டு படங்களுமே தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. அதனால் இந்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருக்கிறது.
இதற்கிடையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஜூலை 28 இல் சம்பவம் இருப்பதாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கிவிட்டார்.அதன்படி தனுஷ் பிறந்தநாளில் ஏதேனும் அப்டேட்டுகள் வெளிவருமா என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அந்த வகையில்  தனுஷின் 50வது படத்தின் டைட்டில் லுக் ஜூலை 27 இல் வெளியாகும் என்றும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின்  டீசர் ஜூலை 28 இல் வெளியாகும் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

MUST READ