டிராகன் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் திரைப்படம் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்திலும் உருவாகியிருந்த இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கல்லூரி மாணவனாக நடிக்க அவருடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கயடு லோஹர், ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்திருந்தனர். லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வெளியான இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில் இப்படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. அதேபோல் ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து தரமான திரைக்கதையை தந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.
எனவே இந்த படத்திற்கு கிடைக்கும் ஆதரவும் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பட்டைய கிளப்பி வருகிறது. இந்நிலையில் இப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை கடந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
- Advertisement -