spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'STR48' இல் இணையும் துல்கர் சல்மான் பட நடிகை!

‘STR48’ இல் இணையும் துல்கர் சல்மான் பட நடிகை!

-

- Advertisement -

'STR48' இல் இணையும் துல்கர் சல்மான் பட நடிகை!சிம்பு தற்போது தன்னுடைய 48வது படத்தில் நடிக்க முழு வீச்சில் தயாராகி வருகிறார். இதற்காக ஜிம்முக்கு சென்று தன் உடலையும் மெருகேற்றியுள்ளாராம். அதன்படி தற்காலிகமாக STR48 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் இரட்டைக் கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் சிம்பு நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. அதன்படி கீர்த்தி சுரேஷ் அல்லது தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து வெளியான தகவலின் படி நடிகை பூஜா ஹெக்டே இணைய உள்ளதாகவும் செய்திகள் பரவின.'STR48' இல் இணையும் துல்கர் சல்மான் பட நடிகை!

இந்நிலையில் சீதாராமம் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை மிர்ணாள் தாகூர் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மிர்ணாள் தாகூர் இதுவரை நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கவில்லை. எனவே இது அவருக்கு முதல் தமிழ்ப்படமாக இருக்கப்போகிறது. ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இம்மாத இறுதிக்குள் தொடங்கவுள்ளது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

மிர்ணாள் தாகூர், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக SK23 படத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதற்கு முன்னதாகவே STR 48 இல் நடிக்க இருப்பதால் இப்படம் அவருக்கு முதல் தமிழ் படமாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

MUST READ