நடிகர் துல்கர் சல்மான் ‘காந்தா’ படம் குறித்து பேசியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் துல்கர் சல்மான் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் வெளியானது. அடுத்தது ‘காந்தா’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் இப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படமானது எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஸ்பிரிட் மீடியா நிறுவனமும், வேப்பரர் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜானு சந்தர் இதற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் இந்த படத்தின் டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட துல்கர் சல்மான் இப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி அவர், “எனக்கு பீரியட் படங்களை பிடிக்கும். ஏனென்றால் எனக்கு அது டைம் டிராவல் மாதிரி. காந்தா ஒரு கலைப்படம் இல்லை. இது மிகவும் கமர்சியல் படமாக இருக்கும். ஒரு சுவாரஸ்யமான படத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு. இது உங்க எல்லாருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


