துல்கர் சல்மானின் காந்தா பட டிரைலர் வைரலாகி வருகிறது.
‘சீதாராமம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த பான் இந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அடுத்தது இவரது நடிப்பில் ‘DQ 41’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் புதிய படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் இவர், எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் காந்தா திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்க ஜானு சந்தர் இதற்கு இசையமைத்துள்ளார். ராணா டகுபதியும், துல்கர் சல்மானும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர். இப்படமானது வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும், அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

தற்போது இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலரை பார்க்கும்போது இந்த படமும் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


