Homeசெய்திகள்சினிமாதுல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' பட முதல் பாடல் வெளியீடு!

துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ பட முதல் பாடல் வெளியீடு!

-

- Advertisement -

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' பட முதல் பாடல் வெளியீடு!

நடிகர் துல்கர் சல்மான் சீதாராமம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பான் இந்திய நடிகராக உருவெடுத்துள்ளார். அந்த வகையில் பல பான் இந்தியா படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதன்படி லக்கி பாஸ்கர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான். இந்த படத்தை தனுஷ் நடிப்பில் வெளியான வார்த்தை படத்தின் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட், ஸ்ரீஹரா ஸ்டுடியோஸ், பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். நிமிஸ் ரவி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அதேசமயம் இந்த படமானது 2024 செப்டம்பர் 27 அன்று வெளியாகும் என்று ஏற்கனவே படக் குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கொள்ளாதே எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலை ஆனந்த் அரவிந்தக்ஷன், ஸ்வேதா மோகன் ஆகியோர் இணைந்து பாடியுள்ள நிலையில் விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ