- Advertisement -
தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபலமான துணிக்கடைகளில் ஒன்று ’சரவணா ஸ்டோர்’. அனைத்து தரப்பு மக்களுக்கு ஏற்ற வகையிலும், பிடித்த வகையிலும் சரவணா ஸ்டோர் கவரும். சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் தலைவர் அருள் சரவணன். தன்னுடைய சரவணா ஸ்டோர்ஸ் தி லெஜெண்ட் கடை விளம்பரத்திற்கு எந்தவொரு மாடல் மற்றும் நடிகர்களை எதிர்பார்க்காமல் தானே விளம்பர நிறுவனங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

திரையுலக ரசிகர்களால் செல்லமாக ‘தி லெஜண்ட்’ என்று அழைக்கப்பட்டார். விளம்பர படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த அவர், தி லெஜண்ட் என்ற பெயரில் படம் நடித்து , அதை அவரே தயாரித்து வெளியிட்டார். ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னனி கதாநாயகர்களுக்கு போட்டியாக, தன் படத்தையும் பான் இந்தியா அளவில் வெளியிட்டு அசத்தினார். 5 மொழிகளில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இப்படத்தை இயக்கினர்.




