spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபோதும் பிரேமலதா இப்படி பண்ணாதீங்க.... கண்ணீருடன் கோரிக்கை விடுத்த விஜயகாந்த் ரசிகர்கள்!

போதும் பிரேமலதா இப்படி பண்ணாதீங்க…. கண்ணீருடன் கோரிக்கை விடுத்த விஜயகாந்த் ரசிகர்கள்!

-

- Advertisement -

போதும் பிரேமலதா இப்படி பண்ணாதீங்க.... கண்ணீருடன் கோரிக்கை விடுத்த விஜயகாந்த் ரசிகர்கள்!பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் சில வருடங்களுக்கு முன்பாக கம்பீரமாக இருந்தவர். சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அதைத்தொடர்ந்து உடல்நிலை சீராக இல்லை என்ற காரணத்தால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இரண்டு நாட்களுக்கு முன்பாக பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

ஆனால் அவரால் எழுந்து நடக்க முடியவில்லை கைகளை தூக்க முடியவில்லை. இந்நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் அவர்களை தேமுதிக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைத்து வந்தார். வீல் சேரில் வந்த விஜயகாந்த் நிலைமையை கண்டு அங்குள்ள பெண் தொண்டர்கள் பலரும் கண்ணீர் சிந்தினர். அதுமட்டுமில்லாமல் நடக்க முடியாமல் கஷ்டப்படும் விஜயகாந்த்துக்கு ஆள் உயரத்தில் மாலையை அணிவித்து மேலும் துன்புறுத்தினார்கள்.போதும் பிரேமலதா இப்படி பண்ணாதீங்க.... கண்ணீருடன் கோரிக்கை விடுத்த விஜயகாந்த் ரசிகர்கள்!

we-r-hiring

இதை கண்ட தொண்டர்களும் ரசிகர்களும் ப்ளீஸ் பிரேமலதா, விஜயகாந்த் தற்போது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலைமையில் இருக்கிறார்.அவருக்கு ஓய்வு தேவை. அதனால் அவரை மேன்மேலும் கஷ்டப்படுத்தாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ