spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவசூலில் மாஸ் காட்டும் ஆவேஷம்... வசூலை அள்ளிய ஃபகத்...

வசூலில் மாஸ் காட்டும் ஆவேஷம்… வசூலை அள்ளிய ஃபகத்…

-

- Advertisement -
மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் திரைப்படம், 4 நாட்களில் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஃபகத் ஃபாசில். இவர் மலையாளத்தில் மட்டுமன்றி தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு அரக்கன் என்று தமிழில் கொண்டாடப்படும் நாயகன் ஃபகத். தமிழில் இவர் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவர் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வேலைக்காரன் படத்தில் நடித்து மிரட்டியிருப்பார். தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.

we-r-hiring
இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் ரத்னவேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இக்கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து, தெலுங்கில் புஷ்பா படத்தில்நடித்து மிரட்டினார். தற்போது மலையாளத்தில் ஃபகத் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் ஆவேஷம். ரோமாஞ்சம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஃபகத் பாசில், நஸ்ரியா நாசிம், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இத்திரைப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்று வருகிறது. 4 நாட்களில் இத்திரைப்படம் சுமார் 5 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

MUST READ