spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஸ்பிரிட்' பட கதையை லீக் செய்த பிரபல நடிகை.... கடும் கோபத்தில் இயக்குனர்!

‘ஸ்பிரிட்’ பட கதையை லீக் செய்த பிரபல நடிகை…. கடும் கோபத்தில் இயக்குனர்!

-

- Advertisement -

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர், அனிமல் திரைப்படத்தை இயக்கினார். 'ஸ்பிரிட்' பட கதையை லீக் செய்த பிரபல நடிகை.... கடும் கோபத்தில் இயக்குனர்!இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் இப்படம் அதிக வசூலை அள்ளியது. இதன் பின்னர் சந்தீப் ரெட்டி வங்கா, பிரபாஸ் நடிப்பில் ஸ்பிரிட் எனும் திரைப்படத்தை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. பிரபாஸின் 25 ஆவது படமான இந்த படத்தில் பிரபாஸ், போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது. அதன் பின்னர் இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் தீபிகா படுகோன் அப்படத்திலிருந்து விலகியதாகவும் அவருக்கு பதிலாக ருக்மிணி வசந்த் இந்த படத்தில் நடிக்க போவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வந்தது. 'ஸ்பிரிட்' பட கதையை லீக் செய்த பிரபல நடிகை.... கடும் கோபத்தில் இயக்குனர்!ஆனால் ஸ்பிரிட் படத்தில் அனிமல் பட நடிகை திருப்தி டிம்ரி தான் நடிக்கப் போகிறார் என சந்தீப் ரெட்டி வங்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் தீபிகா படுகோன், ஸ்பிரிட் படம் பற்றி அளித்த விளக்கத்தில், “இந்த படத்தில் ஹீரோவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் பல இருக்கிறது. ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருந்தாலும், ஹீரோ – ஹீரோயினுக்கான பல போல்டான காட்சிகளும் இந்த படத்தில் இருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் சந்தீப் ரெட்டி வங்கா தனது எக்ஸ் தள பக்கத்தில் தீபிகா படுகோன் குறித்து கோபமாக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நான் ஒரு நடிகருக்கு கதை சொல்லும் போது 100% நம்பிக்கையுடன் சொல்கிறேன். அதை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லப்படாத உடன்படிக்கை உள்ளது. ஆனால் இதை வெளியில் கூறி நீங்கள் யார் என்பதை காட்டி விட்டீர்கள். ஒரு இளம் நடிகரை கீழே தள்ளி, என் கதையை வெளியில் சொல்லி விட்டீர்கள். இதுதான் உங்கள் feminism ஆ? ஒரு இயக்குனராக நான் பல வருட கடின உழைப்பை போட்டு இருக்கிறேன். படம் எடுப்பது தான் எனக்கு எல்லாம். அது உங்களுக்கு புரியாது எப்போதும் புரியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ