விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி லியோ படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, கவுதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோஸ் நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்க இருக்கிறது.
இந்நிலையில் படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜோஜு ஜார்ஜ். மலையாளத்தில் இருக்கும் தேர்ந்த நடிகர்களில் முக்கியமானவர் அவர். இந்நிலையில் தற்போது அவர் ‘லியோ’ படத்தில் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
‘விக்ரம்’ படத்தில் பஹத் பாசிலை நடிக்க வைத்தார். தற்போது ‘லியோ‘ படத்திற்காக மலையாளத்தில் இருந்து மற்றுமொரு சிறந்த நடிகரை களமிறக்கியுள்ளார் லோகி!