Homeசெய்திகள்சினிமாபிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம்..... திரண்டு வரும் திரை பிரபலங்கள்!

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம்….. திரண்டு வரும் திரை பிரபலங்கள்!

-

- Advertisement -

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்திற்கு பல்வேறு திரை பிரபலங்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம்..... திரண்டு வரும் திரை பிரபலங்கள்!மலையாள திரை உலகின் பிரபல நடிகர் சுரேஷ் கோபி, தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் அஜித்தின் தீனா, சரத்குமாரின் சமஸ்தானம், விக்ரமின் ஐ, போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பணியாற்றி வரும் சுரேஷ்கோபி, தற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதே சமயம் பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்நிலையில் சுரேஷ்கோபியின் மகள் பாக்யா சுரேஷுக்கு இன்று கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். இதற்காக குருவாயூர் கோயிலில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம்..... திரண்டு வரும் திரை பிரபலங்கள்!

மேலும் ஏராளமான திரைப்பட பிரபலங்களும் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் மோகன்லால், மம்மூட்டி, குஷ்பூ திலீப் உள்ளிட்ட நடிகர்கள் தங்களின் குடும்பத்துடன் வந்து இத்திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.
இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ