தமிழ் சினிமாவில் சிறுவயதில் இருந்தே தனது திரைப்படத்தை தொடங்கியவர் சிம்பு. அந்த வகையில் இவரை அனைவரும் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இவர் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. மேலும் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 50வது படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 51வது திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. தற்காலிகமாக STR 49 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் சிம்பு ஒரே ஆண்டில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கப் போகிறார். அதாவது சிம்பு நடிக்க உள்ள அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகளும், போஸ்டர்களும் வெளிவந்தாலும் படம் எதுவும் வெளியாகவில்லை என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. எனவே சிம்பு ரசிகர்கள், தக் லைஃப் படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் இன்று (மே 17) வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதேசமயம் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள STR 49 திரைப்படமும் இந்த ஆண்டில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாம். அதாவது ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு ஒரே ஆண்டில் டபுள் டிரேட் கிடைக்கப்போகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட தயாராகி வருகிறார்கள்.