ரீ- ரிலீஸ் செய்யப்பட்ட விஜயின் சச்சின் பட வசூல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு விஜய் ஜெனிலியா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் சச்சின் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். ஜான் மகேந்திரன் இந்த படத்தை இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அரசியல்வாதியாக மாறி இருக்கும் விஜய், ஜனநாயகன் படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவது ரசிகர்களை அதிர்ச்சியின் ஆழ்த்திய இருந்தாலும், அவருடைய பழைய படங்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே விஜயின் கில்லி படம் ரீ – ரிலீஸ் செய்யப்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குத்தாட்டம் போட வைத்தது. அதைத்தொடர்ந்து வெளியாகி இருக்கும் சச்சின் திரைப்படத்தையும் ரசிகர்கள் திரையரங்குகளில் ஆரவாரம் எழுப்பி கொண்டாடி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.5 கோடி வசூல் செய்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.