Homeசெய்திகள்சினிமாயாத்ரா 2 திரைப்படம்... திரையரங்கில் அடித்துக் கொண்ட கட்சித் தொண்டர்கள்...

யாத்ரா 2 திரைப்படம்… திரையரங்கில் அடித்துக் கொண்ட கட்சித் தொண்டர்கள்…

-

- Advertisement -
ஐதராபாத்தில் யாத்ரா 2 திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, கட்சித் தொண்டர்கள் மாறி மாறி தாக்கிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. தெலுங்கு மொழியில் இத்திரைப்படத்தை எடுத்துள்ளனர். இதற்கு முன்பாக ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும், மறைந்த ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியானது. யாத்ரா என்ற தலைப்பில் கடந்த 2019-ம் ஆண்டு இப்படம் வெளியானது. இதில் மம்மூட்டி நடித்திருந்தார்.

தற்போது ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தை மஹி வி ராகவ் இயக்கியிருக்கிறார். இதில், ஜெகன் மோகன் ரெட்டியாக பிரபல தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார். முந்தைய பாகத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் நடித்த மம்மூட்டி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்

இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள பிரசாத் திரையரங்கிலும் யாத்ரா 2 திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது, படம் பார்த்துக் கொண்டிருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்களும், பவன் கல்யாணின் ஆதரவாளர்களும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ