பிரபல பாலிவுட் நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் அக்ஷய் குமார், அர்ஜூன் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமன்றி நடனத்திலும் அசத்தும் ஜாக்குலின் அடுத்தடுத்து பல படங்கலில் கமிட்டாகி பிசியாக நடித்து வந்தார். ஆனால், தற்போது சினிமாவிலிருந்து இடைவெளி எடுத்துள்ளார். தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசுப்பொருட்கள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த இடைத்தரகர் சுகேஷ் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக நடிகை ஜாக்குலினும் அவ்வப்போது ஆஜர் படுத்தப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த காரணத்தால் அவர், படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார். இந்நிலையில், மும்பையில் ஜாக்குலின் வசித்து வரும் அடுக்குமாடு குடியிருப்பில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது தளத்தில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தால் ஜாக்குலின் வீட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.