பத்து தல படத்தின் முதல் நாள் வசூல்? சிம்புவின் புதிய உச்சம்!
சிம்பு நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ள பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த பின், பத்து தல படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது.

நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள பத்து தல படம் நேற்று(30.03.2023) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தின் எதிர்பார்ப்பை போலவே முதல் நாள் திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டமும் அமைந்தது. இந்த படம் தெலுங்கில் 2018ஆம் ஆண்டில் வெளியான மப்டி படத்தின் ரீமேக் என்றாலும், தமிழுக்கு ஏற்றவாறு படம் எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சிம்பு ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த படத்தின் இண்டர்வலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் சிம்புவின் என்ட்ரி இருக்கும் என்றாலும், இரண்டாம் பாதி முழுவதும் சிம்புவின் ஆதிக்கம் தான் என்றும், படத்தை முழுவதுமாக தூக்கி சுமந்துள்ளார் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, இத்திரைப்படம் சிம்பு ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகவே அமைந்துள்ளதாக தெரிகிறது.
பத்துதல படத்தின் எதிர்பார்ப்பு, விமர்சனங்கள் அனைத்தையும் தாண்டி அதன் வசூல் என்பதால் வெற்றியை முடிவு செய்யும் முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில், பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மேலும், பத்து தல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன்,”பிளாக் பஸ்டர் பத்து தல” என ட்வீட் செய்துள்ளது. இதனை சிம்பு ரசிகர்கள் ரீ-ட்வீட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
மேலும், படம் தற்போது 450 திரையரங்குகளில் 650 ஸ்கிரீன்களில் படம் திரையிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பத்து தல படம் தமிழ்நாட்டில் மொத்தம் 7 கோடி ரூபாய்யை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தமிழ்நாட்டிற்கு வெளியே மொத்தம் 4 கோடி ரூபாய் என மொத்தம் 11 ரூபாய் கோடியை முதல் நாளில் வசூலித்துள்ளது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளது. மேலும், இதுதான் சிம்புவின் திரைப்படங்களிலேயே முதல் நாள் அதிக வசூலை குவித்த படம் கூறப்படுகிறது.
பத்து தல படத்துடன் நானி நடித்துள்ள தசாரா படமும் வெளியாகியுள்ளது. மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி நடித்த விடுதலை (முதல் பாகம்) படம் இன்று வெளியாக உள்ளது.
மேலும், வார இறுதியில் தான் எந்த திரைப்படம் வசூலில் முன்னணியில் வரும் என்பது தெரியவரும். தொடர்ந்து வசூல் சாதனை செய்யுமா? என்பதை ரசிகர்கள் இந்த வார இறுதி வரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
#PathuThalaBlockbuster Opening 💥💥💥#PathuThala In Cinemas Now @StudioGreen2 @PenMovies #Atman @SilambarasanTR @Gautham_Karthik @arrahman @nameis_krishna @sayyeshaa @NehaGnanavel @Dhananjayang @SonyMusicSouth @digitallynow pic.twitter.com/2RYgmJdOQd
— Studio Green (@StudioGreen2) March 31, 2023