Homeசெய்திகள்சினிமாசுனைனா - விஷ்வத் நடிக்கும் ராக்கெட் டிரைவர்... முதல் தோற்றம் இதோ...

சுனைனா – விஷ்வத் நடிக்கும் ராக்கெட் டிரைவர்… முதல் தோற்றம் இதோ…

-

- Advertisement -
kadalkanni
காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சுனைனா. அதைத் தொடர்ந்து மாசிலாமணி, கவலை வேண்டாம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்து இருக்கிறார். இது தவிர ட்ரிப் என்ற திரைப்படத்தில் முதன்மை கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.

அவரது நடிப்பில் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ரெஜினா. இந்தப் படத்தை டோமின் டி சில்வா இயக்கினார். எல்லோ பியர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் இப்படம் தயாரிக்கப்பட்டது. சதீஷ் நாயர் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் சுனைனா உடன் இணைந்து விவேக் பிரசன்னா, நிவாஸ் ஆதித்தன் மற்றும் பலர் நடித்திருந்தனர். கதாநாயகியை முன்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இதைத் தொடர்ந்து இறுதியாக இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணைய தொடரில் சுனைனா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ராக்கெட் டிரைவர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் சந்திரசேகர் இயக்கும் இப்படத்தில் விஷ்வத், நாகவிஷால், காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ள படக்குழு, விரைவில் முதல் பாடல் வௌியாகும் என்று தெரிவித்துள்ளது.

MUST READ