- Advertisement -
ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் சைரன் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகும் நாள் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது.

கோலிவுட்டில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெயம்ரவி. அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் முதல் படத்திலேயே முத்திரை பதித்த ரவி, ஜெயம்ரவி என்றே அழைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பல படங்கள் மோகன் ராஜா இயக்கத்திலேயே நடித்து வந்தார். ஜெயம் ரவி குறுகிய காலத்திலேயே முதன்மை நாயகராக உருவெடுத்தார். கடந்த ஆண்டு ஜெயம்ரவி உள்பட பெரும் நட்சத்திர பட்டாள நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது


இப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த அகிலன், இறைவன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் சைரன். ஆண்டனி பாக்யராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் ஜெயம்ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



