Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவியின் அகிலன் படத்தின் முதல் பாடல் வெளியானது

ஜெயம் ரவியின் அகிலன் படத்தின் முதல் பாடல் வெளியானது

-

- Advertisement -

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் அகிலன் திரைப்படம் மார்ச் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். பூலோகம் படத்துக்கு பின் அகிலன் படத்தின் மூலம் 2-வது முறையாக இயக்குநருடன் கைக்கோர்த்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தை மார்ச் மாதம் 10-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் அகிலன் படத்தின் முதல் பாடலான ‘துரோகம்’ பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

MUST READ