குட் பேட் அக்லி
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Maamey…it’s time for VERA LEVEL ENTERTAINMENT 💥💥#GoodBadUglyTeaser on February 28th ❤🔥#GoodBadUgly grand release on 10th April 🔥
#AjithKumar @trishtrashers @MythriOfficial @Adhikravi @AbinandhanR @editorvijay @suneeltollywood @GoodBadUglyoffl… pic.twitter.com/nuvpqEOxvk— Mythri Movie Makers (@MythriOfficial) February 25, 2025
ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறான். இந்த படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் கொண்டாடத் தயாராகி வருகிறார்கள்.
சப்தம்
ஈரம் படக் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சப்தம். அதன்படி அறிவழகன் இந்த படத்தை இயக்க நடிகர் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து லட்சுமிமேனன், சிம்ரன், லைலா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இன்று (பிப்ரவரி 26) மாலை 7 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிஸ்டர் எக்ஸ்
ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார் ஆகியோரின் நடிப்பில் மிஸ்டர் எக்ஸ் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஸ்பைத் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திலிருந்து ஹய்யோடி எனும் முதல் பாடல் நாளை (பிப்ரவரி 27) வெளியாக இருக்கிறது.
கிங்ஸ்டன்
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கிங்ஸ்டன். ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தினை கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். வருகின்ற மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வரும் இந்த படத்தின் டிரைலர் நாளை (பிப்ரவரி 27) வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.