Homeசெய்திகள்சினிமாராம் சரணுக்கு முகத்தில் காயம்..... 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து!

ராம் சரணுக்கு முகத்தில் காயம்….. ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பு ரத்து!

-

ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு கேம் சேஞ்சர் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரனுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, கியாரா அத்வானி ,ஜெயராம், அஞ்சலி, ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்.இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்பட இருந்த நிலையில் ராம் சரணுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ராம்சரனை மருத்துவர்கள் 10 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் படப்பிடிப்பு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

MUST READ