கங்கை அமரன், சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக ‘மதராஸி’ திரைப்படம் வெளியானது. அதேசமயம் இவர், தனது 25வது படமான ‘பராசக்தி’ திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்குப் பிறகு சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
அதன்படி சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படமானது SK 24 படமாகவும், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படமானது SK 26 படமாகவும் உருவாகும் என சொல்லப்படுகிறது. அதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரபல இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி அவர் சமீபத்தில் நடந்த பேட்டியில், “வெங்கட் பிரபுவின் SK 26 படத்தின் கதை அற்புதமாக இருக்கிறது. அது மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயன் SK 24 மற்றும் SK 26 ஆகிய இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.


