கேங்கர்ஸ் திரைப்படம் ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான மதகஜராஜா திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து வெளியான கேங்கர்ஸ் திரைப்படமும் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. சுந்தர்.சி இந்த படத்தை இயக்கி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுந்தர்.சி-க்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து வடிவேலு, கேத்தரின் தெரசா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. நடிகர் வடிவேலுவும் மீண்டும் காமெடியனாக கலக்கியிருக்கிறார். அதாவது சுந்தர்.சி இந்த படத்தில் விண்டேஜ் வடிவேலுவை திரும்ப கொண்டு வந்தது மட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். மேலும் இப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் இப்படம் முதல் ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ 9 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடை விடுமுறை என்பதால் இனிவரும் நாட்களிலும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தினை அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் தயாரிக்க சத்யா.சி இதற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.