spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇன்று முதல் திரையரங்குககளில் கருடன்... ரசிகர்களின் விமர்சனம் இதோ...

இன்று முதல் திரையரங்குககளில் கருடன்… ரசிகர்களின் விமர்சனம் இதோ…

-

- Advertisement -
கோலிவுட்டின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கும் சூரி கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் மூலம் நாயகனா உருவெடுத்தார். இத்திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே, துரை செந்தில் குமார் இயக்கும் புதிய படத்திலும் அவர் நடித்துள்ளார். வெற்றிமாறன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வௌியாகி உள்ளது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

https://x.com/i/status/1796138941734625469

we-r-hiring
படத்தைக் கண்ட ரசிகர்கள் சூரியை வெகுவாக பாராட்டி உள்ளனர். கிராமத்து பின்னணியில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில், சூரி, சமுத்திரக்கனி மற்றும் உன்னிமுகுந்தனின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். செந்தில்குமாரின் வழக்கமான திரைப்படம் போல கருடனும் கலக்கலான கமர்ஷியல் படமாக இருப்பதாக தெரிவித்தனர். நட்பு, துரோகம், பேராசை என படம் முழுக்க விறுவிறுப்பாக செல்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், படத்தில் சசிகுமாரின் வேடம் பொருத்தமாக இருப்பதாகவும், சூரி மற்ற திரைப்படங்களை போல் அல்லாமல் பயங்கர ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருப்பதாகவும், படத்திற்கு தூணாக யுவனின் இசை அமைத்திருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டி இருக்கின்றனர்.

MUST READ