கட்டா குஸ்தி 2 படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு செல்லா அய்யாவு இயக்கத்தில் ‘கட்டா குஸ்தி’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடித்திருந்தார். குடும்பம், கலாட்டா, குத்துச்சண்டை என நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து கட்டா குஸ்தி 2 திரைப்படம் உருவாகப்போவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் நேற்று (செப்டம்பர் 1) இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. அதன்படி வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, முனீஸ்காந்த், காளி வெங்கட், கருணாஸ் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர்.
Powerful beginnings to powerful sequels! 🥊
Radiant vibes and endearing smiles adorn the Pooja ceremony of #GattaKusthi2 💥🙏
A film by @ChellaAyyavu 💥
An @RSeanRoldan musical.@VelsFilmIntl @VVStudioz @IshariKGanesh @TheVishnuVishal @AishuL_ @kushmithaganesh @nitinsathyaa… pic.twitter.com/6CBLkdSZK2— Vels Film International (@VelsFilmIntl) September 2, 2025

செல்லா அய்யாவு இயக்கும் இந்த இரண்டாம் பாகத்திற்கு கட்டா குஸ்தி – 2nd Round என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
— Vels Film International (@VelsFilmIntl) September 2, 2025
இந்நிலையில் படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த படத்தின் பூஜை இன்று (செப்டம்பர் 2) சிறப்பாக நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.