கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர், வை ராஜா வை, இருட்டு அறையில் முரட்டு குத்து, தேவராட்டம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் கிரிமினல், மிஸ்டர் எக்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர ஏ.எல். விஜய் இயக்கத்தில் மாதவன் – கங்கனா நடிக்கும் புதிய படத்தில் சிறிய வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இவர், புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
இந்த படத்தை சின்னசாமி பொன்னையா இயக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைக்கிறார். படத்தை கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இதன் அறிவிப்பு போஸ்டரில் கௌதம் கார்த்திக்கின் கையில் ஒரு வாள் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. அதில் சிகப்பு நிற துணி பறக்கிறது. அதே சமயம் ரத்தமும் வடிகிறது. இதை பார்க்கும் போது இந்த படமானது போராட்டம், புரட்சிகரமான படமாக இருக்கும் போல் தெரிகிறது. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -


