spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியான கௌதம் மேனனின் ஜோஸ்வா!

சத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியான கௌதம் மேனனின் ஜோஸ்வா!

-

- Advertisement -

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.

சத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியான கௌதம் மேனனின் ஜோஸ்வா!

we-r-hiring

அதே சமயம் இவர் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. பலமுறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் ஒரு சில காரணங்களால் இந்த படம் தள்ளிப் போய்க் கொண்டே போகிறது. இருப்பினும் விரைவில் படத்தினை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கியிருந்த ஜோஸ்வா இமைபோல் காக்க எனும் படத்தை வெளியிட திட்டமிட்டார். அதன்படி இந்த படம் கடந்த மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தில் வரும் கதாநாயகனாக நடித்திருந்தார். சத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியான கௌதம் மேனனின் ஜோஸ்வா!மேலும் அவருடன் இணைந்து கிருஷ்ணா, யோகி பாபு, திவ்யதர்ஷினி, விசித்ரா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படத்திற்கு கார்த்திக் இசையமைக்க எஸ் ஆர் கார்த்தி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருந்தார். இந்த படம் வெளியாகி கௌதம் மேனனுக்கு எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. இந்நிலையில் இப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

MUST READ