spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமுதல் வார இறுதியில் 300 கோடியை நெருங்கிய 'கோட்'!

முதல் வார இறுதியில் 300 கோடியை நெருங்கிய ‘கோட்’!

-

- Advertisement -

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் கோட் என்று சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா- மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.முதல் வார இறுதியில் 300 கோடியை நெருங்கிய 'கோட்'! அதாவது அழகிய தமிழ் மகன் திரைப்படத்திற்கு பிறகு ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார். மேலும் இதில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் இந்த படம் உருவாகி இருந்தது. மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ்வான விமர்சனங்களை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி முதல் நாளில் 126 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது கோட். 'கோட்' படத்திலிருந்து விரைவில் வெளியாகும் நீக்கப்பட்ட காட்சி.... வெங்கட் பிரபு!அடுத்தது முதல் வார இறுதியில் தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 130 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள கோட் திரைப்படம் உலக அளவில் 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ