spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்... இரு பிரபலங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்… இரு பிரபலங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

-

- Advertisement -

இன்று சென்னையில் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் இரு பிரபலங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்... இரு பிரபலங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!இன்று (செப்டம்பர் 8) சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் ஒன்று பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் நிரூபிக்கப்பட்டவர்கள் திரைத் துறையில் பணியாற்ற ஐந்து ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்தது தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டில் முடிவடைந்து விடும் நிலையில் அதனை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்... இரு பிரபலங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! தேர்தல் பணிகளை தொடர்ந்தால் நடிகர் சங்கத்தின் கட்டிடம் எழுப்பும் பணிகள் பாதிக்கும் என்பதனால் இந்த முடிவு நடத்தப்படுவதாக தெரிவித்து இருக்கின்றனர். அடுத்தபடியாக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் நடிகை விஜயகுமாரி ஆகியோருக்கு இந்தக் கூட்டத்தில் கலை உலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ