Homeசெய்திகள்சினிமா'GOAT' படத்தின் தரமான அப்டேட் விரைவில்....இயக்குனர் வெங்கட் பிரபு!

‘GOAT’ படத்தின் தரமான அப்டேட் விரைவில்….இயக்குனர் வெங்கட் பிரபு!

-

இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர். தற்போது இவர் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். 'GOAT' படத்தின் தரமான அப்டேட் விரைவில்....இயக்குனர் வெங்கட் பிரபு!ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், மீனாட்சி சௌத்ரி, அஜ்மல், வைபவ் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். விஜய்யை இளமையான தோற்றத்தில் காண்பிக்க டிஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'GOAT' படத்தின் தரமான அப்டேட் விரைவில்....இயக்குனர் வெங்கட் பிரபு!இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ரஷ்யா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 'GOAT' படத்தின் தரமான அப்டேட் விரைவில்....இயக்குனர் வெங்கட் பிரபு!ஏனென்றால் முதன்முறையாக யுவன் இசையில் விஜய் பாடியுள்ளார். ஆகவே இந்த பாடலின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில், “GOAT அப்டேட் விரைவில் வரும். அது தரமானதாக இருக்கும்” என்ற அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். எனவே விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ