spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதங்கம் வென்று சென்னை திரும்பும் தங்கமகள் காசிமாவிற்கு மேளதாளங்களோடு உற்சாக  வரவேற்பு

தங்கம் வென்று சென்னை திரும்பும் தங்கமகள் காசிமாவிற்கு மேளதாளங்களோடு உற்சாக  வரவேற்பு

-

- Advertisement -

அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் போர்டு உலக சாம்பியன் போட்டியில் சென்னை புது வண்ணாரப்பேட்டை செர்பியன் நகரை  சேர்ந்த 17 வயதான காசிமா மகளிர் தனிப்பிரிவு ,இரட்டையர் பிரிவு ,குழுப் பிரிவு என மூன்று பிரிவுகளில்  விளையாடி மூன்று தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் . தங்கம் வென்று சென்னை திரும்பும் தங்கமகள் காசிமாவிற்கு மேளதாளங்களோடு உற்சாக  வரவேற்பு

இவர் சாதனையை பாராட்டி தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் காசிமா தற்போது புது வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்க்காக வந்து கொண்டிருந்தபோது ராயபுரம் பகுதியில் அவரது உறவினர்கள் குடும்பத்தார் நண்பர்கள் என ஏராளமானோர் சேர்ந்து உற்சாக வரவேற்பளித்தனர்.

we-r-hiring

திறந்தவெளி காரில் வந்து கொண்டிருந்த காசிமாவிற்கு மேளதாளங்களோடு மகிழ்ச்சி ததும்ப  ஆரவாரம் செய்து வரவேற்றனர். சாலையில் செல்லக்கூடிய பொதுமக்கள் காசிமாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் காசிமா அமெரிக்காவில் செல்வதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கி உதவியது குறித்து காசிமா அவருக்கு  நன்றி தெரிவித்திருந்தார்.தங்கம் வென்று சென்னை திரும்பும் தங்கமகள் காசிமாவிற்கு மேளதாளங்களோடு உற்சாக  வரவேற்பு

இந்நிலையில் ராயபுரம் தண்டையார்பேட்டை புது வண்ணாரப்பேட்டை பகுதி முழுவதுமே காசிமாவிற்கு ,திராவிட முன்னேற்ற கழக எம்எல்ஏக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய கார்டு  – நவ. 30ம் தேதி வரை சிறப்பு முகாம் !

 

MUST READ