spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய கார்டு  - நவ. 30ம் தேதி வரை சிறப்பு முகாம்...

சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய கார்டு  – நவ. 30ம் தேதி வரை சிறப்பு முகாம் !

-

- Advertisement -

சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய கார்டு  - நவ. 30ம் தேதி வரை சிறப்பு முகாம் !

சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இன்று முதல் நவ.30ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

we-r-hiring

சென்னையில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது

சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்துதல், சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

நகர விற்பனைக் குழுவின் 06.11.2024 அன்று நடைபெற்ற 8வது கூட்டத்தில் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு (Weblink) பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி புதிய அடையாள அட்டை இன்று முதல் 30ம் தேதி வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரு சில வார்டு வியாபாரிகளுக்கு இன்னும் புதிய அட்டை வரவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியரல்லாத பணியிடங்கள் மட்டுமே தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு – டாக்டா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

MUST READ