குட் பேட் அக்லி படத்தின் பிரீமியர் ஷோ ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கப் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, சுனில், பிரசன்னா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படமானது அப்பா- மகன் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் திருப்திப்படுத்தாத நிலையில் குட் பேட் அக்லி படத்தை வருகின்ற ஏப்ரல் 10 அன்று திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும், முதல் பாடலும் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அடுத்தது படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி விடுகிறது.
இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குட் பேட் அக்லி படத்தை ஏப்ரல் 9ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் பிரீமியர் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இப்படத்தின் பிரீமியர் ஷோ ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் குட் பேட் அக்லி பிரீமியர் ஷோவை பார்க்க வரும் ரசிகர்கள் அதில் உள்ள முக்கியமான காட்சிகள் வசனங்கள் ஆகியவற்றை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் ஏப்ரல் 10ல் வெளியாகும் ஏற்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்புகளும் சுவாரஸ்யங்களும் குறைந்து விடும் என்பதற்காகவும் இந்த பிரீமியம் ஷோ ரத்து செய்து இருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளது.